spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎச்.வினோத்துக்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ்

எச்.வினோத்துக்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ்

-

- Advertisement -
கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 AD திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை வினோத் இயக்கும் புதிய படம் ஒன்றில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். கமல்ஹாசனின் 233 வது திரைப்படமான இந்த படத்திற்கு தற்காலிகமாக KH233 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை கமல்ஹாசன் மற்றும் R மகேந்திரன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றனர். இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது. இத்திரைப்படத்திற்கு தலைவன் இருக்கிறான் என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்து இருக்கிறது.

இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் எச்.வினோத்துக்கு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

MUST READ