மதகஜராஜா திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சம்பவம் செய்து வருகிறது.
விஷால் நடிப்பில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் மதவஜராஜா. இந்த படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிக்க சுந்தர் சி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்க நடிகர் சந்தானம் இந்த படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார். கடந்த 12 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படம் தற்போது திரைக்கு வந்த நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். அதாவது சந்தானத்தின் காமெடி திரையரங்கையே சிரிப்பலையால் அதிர வைத்துள்ளது. நீண்ட வருடங்கள் கழித்து வெளியான இந்த படத்தை ரசிகர்கள் பலரும் புதிய படமாக பார்த்து ரசித்து வருகின்றனர். எனவே பொங்கல் தினத்தை முன்னிட்டு கேம் சேஞ்சர், வணங்கான், மெட்ராஸ்காரன் என பல படங்கள் வெளியானாலும் மதகஜராஜா திரைப்படம் தான் பொங்கல் வின்னர் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த படமும் தமிழ்நாட்டில் மட்டுமே வெளியான முதல் ஐந்து நாட்களில் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் இப்படம் விரைவில் 50 கோடி ரூபாயை நெருங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.