மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்தில் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்த புரமுலு என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் த்ரிவிக்ரம். இவர் மகேஷ் பாபு நடிப்பில் குண்டூர் காரம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஹாரிக்கா & ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மகேஷ்பாபு உடன் இணைந்து ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசை அமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் முதல் நாளில் 94 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் விரைவில் படம் 500 கோடியை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் மகேஷ் பாபுவின் வேறு எந்த திரைப்படமும் ஒரே நாளில் இந்த அளவுக்கு வசூல் சாதனை படைத்ததில்லை என்றும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே மகேஷ்பாபுவின் தொங்கா(2002), ஒக்கடு (2003-தமிழில் கில்லி), பிசினஸ் மேன் (2013), சீதாம்மா வாகிட்லோ சிறு மெல்லு செட்டு (2013), ஒன் நேநொக்கடேன் (2014), சரிலேரு நீக்கெவரு (2020) போன்ற படங்கள் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீஸாகின என்பது குறிப்பிடத்தக்கது.