Homeசெய்திகள்சினிமாஇனிவரும் நாட்களில் 'ஜனநாயகன்' அப்டேட்ஸ் வரும்.... மமிதா பைஜு!

இனிவரும் நாட்களில் ‘ஜனநாயகன்’ அப்டேட்ஸ் வரும்…. மமிதா பைஜு!

-

- Advertisement -

நடிகை மமிதா பைஜு, ஜனநாயகன் படத்தின் அப்டேட்ஸ் இனிவரும் நாட்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.இனிவரும் நாட்களில் 'ஜனநாயகன்' அப்டேட்ஸ் வரும்.... மமிதா பைஜு!

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பிரேமலு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை மமிதா பைஜு. இவர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபல் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர், விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மமிதா பைஜு, விஜய்க்கு மகளாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் புதிய படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் மமிதா பைஜு. அதன்படி விஷ்ணு விஷால், மமிதா பைஜு கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு இரண்டு வானம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த போஸ்டரை பார்க்கும்போது இந்த படமானது காதல் சம்பந்தமான கதைக்களம் என்று தெரியவந்தது.இனிவரும் நாட்களில் 'ஜனநாயகன்' அப்டேட்ஸ் வரும்.... மமிதா பைஜு! இந்நிலையில் தான் கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மமிதா பைஜுவும், விஷ்ணு விஷாலும் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய மமிதா பைஜு, “இனிவரும் நாட்களில் ஜனநாயகன்படத்தின் அப்டேட்ஸ் வரும்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

MUST READ