Homeசெய்திகள்சினிமாமலையாளத்தில் ஹிட் அடித்த பிரம்மயுகம்... ஓடிடி ரிலிஸ் அப்டேட்...

மலையாளத்தில் ஹிட் அடித்த பிரம்மயுகம்… ஓடிடி ரிலிஸ் அப்டேட்…

-

மம்மூட்டி நடிப்பில் திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரம்மயுகம் படத்தின் ரிலீஸ் அப்டேட் வௌியாகி உள்ளது.

தமிழுக்கு ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்றால், மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி. கடந்த சில ஆண்டுகளாக நடிகர் மம்மூட்டி, பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் தி கோர். இத்திரைப்படத்தில் ஓரின சேர்க்கையாளராக அவர் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, மம்மூட்டி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் பிரம்மயுகம். இப்படத்தில் முதியவர் வேடத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார்.

பூதகாலம் திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்ற ராகுல் பிரம்மயுகம் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து, அர்ஜூன் அசோகன், சித்தார்த், பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது.

இத்திரைப்படம் கடந்த 15-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியானது. இந்நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வரும் மார்ச் மாதம் 15-ம் தேதி சோனிலைவ் தளத்தில் இப்படம் வெளியாகிறது.

MUST READ