spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூரியின் பிறந்தநாள் இன்று.... 'மண்டாடி' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

சூரியின் பிறந்தநாள் இன்று…. ‘மண்டாடி’ பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

மண்டாடி படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி உள்ளது.சூரியின் பிறந்தநாள் இன்று.... 'மண்டாடி' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சூரி. அதாவது இந்த படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியின் மூலம் பரோட்டா சூரி என்று பலராலும் அழைக்கப்பட்டார். அதன் பிறகு சிவகார்த்திகேயன், விமல், விஷ்ணு விஷால், சூர்யா, விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். இவர் ஹீரோவாகவும் களமிறங்கி விடுதலை, கருடன், மாமன் ஆகிய வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார். அடுத்ததாக இவர், மண்டாடி எனும் திரைப்படத்தில் வித்தியாசமான பரிமாணத்தில் நடிக்கிறார். படகு போட்டி சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்க ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சூரியின் பிறந்தநாள் இன்று.... 'மண்டாடி' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!இதில் சூரயுடன் இணைந்து சுகாஸ், சத்யராஜ், மகிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் நிலையில் படத்தின் மீதுதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 27) நடிகர் சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

MUST READ