spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் பாலிவுட் பிரபலம்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் பாலிவுட் பிரபலம்

-

- Advertisement -
வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க அதிக விருப்பம் இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் திரைக்கு கொண்டுவரும் இயக்குநர்களின் முன்னோடி இயக்குநர் வெற்றிமாறன். தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. தனுஷின் திரைவாழ்விலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதைத்தொடர்ந்து, தனுஷை வைத்து மீண்டும் ஆடுகளம் என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, விசாரணை, வட சென்னை, அசுரன் படத்தை இயக்கினார்.

we-r-hiring
இவரது இயக்கத்தில் இறுதியாக வௌியான திரைப்படம் விடுதலை. இதில் சூரி நாயகனாக நடித்திருப்பார். மேலும், விஜய் சேதுபதி, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது விடுதலை பாகம் 2 படத்தை இயக்கி வருகிறார். இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என தெரிவித்துள்ளார். சிறப்பான மற்றும் அழுத்தமான படங்களை எடுப்பது மட்டும் இதற்கு காரணம இல்லை. அனைவருக்குமான படங்களை எடுப்பதால், அவர் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். அவர் ஒரு கதையை அணுகும்முறை, அதனை மக்களுக்கு வெளிப்படுத்தும் முறை தம்மை மிகவும் கவர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

MUST READ