நடிகர் மன்சூர் அலிகான், கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலும் திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் விஜயகாந்த், கார்த்தி, பிரசாந்த், விஜய், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும், ஹீரோவாகவும் , காமெடியனாகவும் நடித்து வருகிறார். அதே சமயம் இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் வேலூரில் போட்டியிடும் மன்சூர் அலிகான் நேற்று குடியாத்தத்தில் தேர்தல் பரப்புரையின் போது மன்சூர் அலிகானுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஐ சி யு வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வரும் நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் தான் மன்சூர் அலிகான் பரபரப்பு புகார் ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது மன்சூர் அலிகானுக்கு விஷம் தரப்பட்டுள்ளதாக பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
அதாவது குடியாத்தம் சந்தையில் மன்சூர் அலிகான் கட்டாயப்படுத்தி ஜூஸ் மற்றும் மோர் போன்றவைகள் கொடுக்கப்பட்டதாகவும் அதனை குடித்த பிறகுதான் எனக்கு மயக்கம் ஏற்பட்டு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விஷ முறிவு சிகிச்சைக்கு பின் மன்சூர் அலிகான் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்று மதியம் இரண்டு மணி அளவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.
- Advertisement -