இயக்குனர் மாரி செல்வராஜ் தண்டகாரண்யம் படத்தை பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் நேற்று (செப்டம்பர் 19) திரையரங்குகளில் திரையிடப்பட்ட திரைப்படம் தான் ‘தண்டகாரண்யம்’. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், கலையரசன், டான்சிங் ரோஸ் சபீர், ரித்விகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை இயக்கி கவனம் பெற்ற அதியன் ஆதிரை இயக்கியிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசையமைக்க பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் ஆகிய இருவரும் அண்ணன் – தம்பியாக நடித்திருக்கின்றனர். இந்த படமானது பழங்குடியின கிராம மக்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தில் அடர்ந்த வனப்பகுதிகள் ‘தண்டகாரண்யம்’ என்று குறிப்பிடப்படுவதைப் போல இப்படம் பெரும்பாலும் வனப்பகுதிகளை சுற்றி நகருகிறது. சமூக கருத்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “தண்டகாரண்யம் படம் ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. இதன் மையக்கரு பயங்கரமாக டிஸ்டர்ப் பண்ணுகிறது. சமூகத்தை உலுக்க கூடிய படம். இந்த மாதிரி படங்களை எடுக்க துணிச்சல் வேண்டும். அதியன் ஆதிரை இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்திலும் சரி, இந்த படத்திலும் சரி பெரிய பாய்ச்சலாக பண்ணியிருக்காரு. அதாவது இதுவரை பேசப்படாத பேச வேண்டிய படத்தை மக்களிடம் கொண்டு வந்திருக்கிறாரு. இது ரொம்ப முக்கியமான படைப்பு” என்று பாராட்டியுள்ளார்.


