Homeசெய்திகள்சினிமாமெகா கூட்டணியின் மழை பிடிக்காத மனிதன்... இணையத்தில் டீசர் வெளியீடு...

மெகா கூட்டணியின் மழை பிடிக்காத மனிதன்… இணையத்தில் டீசர் வெளியீடு…

-

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

கோலி சோடா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் இயக்குநர் விஜய் மில்டன். இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இத்திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனம் பெற்றது. இதையடுத்து விஜய் மில்டன் தமிழில் படம் இயக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன். இத்திரைப்படத்தில் பிரபல இசை அமைப்பாளரும், நடிகருமான விஜய்ஆண்டனி நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் இறுதியாக ரோமியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில், மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், முரளி சர்மா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

படத்திற்கு அச்சு ராஜாமணி மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து இசை அமைத்துள்ளனர். இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் மட்டுமே வௌிவந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இணையத்தில் இது டிரெண்டாகி வருகிறது. மேலும், ஜூன் மாதம் இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.

MUST READ