விஜய் தேவரகொண்டா படத்தில் ஸ்ரீ லீலாவிற்கு பதிலாக விஜய் பட நடிகை?
- Advertisement -

எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல், யூ டியூப் மூலம் அறிமுகமாகி சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக உயர்ந்திருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவர் தெலுங்கில் அறிமுகமாகி 2 படங்கள் நடித்தும் வரவேற்பு இல்லை. இதைத் தொடர்ந்து பெல்லி சோப்புலு என்ற படத்தில் நடித்தார். இது அவரது மூன்றாவது திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அடுத்து விஜய் தேவரகொண்டா நடித்த திரைப்படம் தான் அர்ஜூன் ரெட்டி. இப்படம் இந்தியா முழுவதும் ஹிட் அடிக்க, பான் இந்தியா நடிகராக உருவெடுத்தார் விஜய் தேவரகொண்டா.

இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் குஷி. இத்திரைப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் ஹிட் அடித்தது. விஜய் தேவரகொண்டா அடுத்ததாக ‘ஜெர்ஸி’ படத்தின் இயக்குனர் கெளதம் தின்னுரி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு, ‘VD 12’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு பட பூஜையும் நடைபெற்றும் முடிந்தது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் கதாநாயகி மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீலீலாவுக்கு மாற்றாக தற்போது மீனாட்சி சௌத்ரி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜியுடன் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.