Homeசெய்திகள்சினிமாஅனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி'..... ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’….. ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை அனுஷ்கா கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான நிசப்தம் படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க இருக்கிறார். யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க மகேஷ் பாபு இயக்கியுள்ளார். ரதன் இசையிலும் நீரவ் ஷா ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் பொலி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் அனுஷ்கா இதில் சமையல் கலைஞராக நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாக இருந்தது. அதன் பின் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு படக்குழுவினர் மாற்றினர். இந்நிலையில் இதன் ட்ரெய்லர் வருகின்ற ஆகஸ்டு 21ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ