Homeசெய்திகள்சினிமாமோகன்லால் நடிப்பில் உருவாகும் மலைக்கோட்டை வாலிபன்.... டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மோகன்லால் நடிப்பில் உருவாகும் மலைக்கோட்டை வாலிபன்…. டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மோகன்லால் நடிப்பில் உருவாகும் மலைக்கோட்டை வாலிபன்.... டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!பிரபல நடிகர் மோகன் லால் தற்போது தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நேரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதேசமயம் வ்ருஷபா எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் மோகன்லால் மலைக்கோட்டை வாலிபன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பெலிசெரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் மோகன்லாலுடன் இணைந்து சோனாலி குல்கர்னி, ஹரிஷ் பேரடி, தனிஷ் செய்யது, நந்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ் நிறுவனம் இதனை தயாரிக்க பிரசாந்த் பிள்ளை இதற்கு இசை அமைக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக மலைக்கோட்டை வாலிபன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. மோகன்லால் நடிப்பில் உருவாகும் மலைக்கோட்டை வாலிபன்.... டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!அதைத் தொடர்ந்து இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ