மோகன்லால் நடிக்கும் துடரும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாளத் திரையுலகில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த மார்ச் 27ஆம் தேதி இவரது நடிப்பில் உருவாகியிருந்த எம்புரான் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதற்கிடையில் மோகன்லால், வ்ருஷபா, ராம் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் தருண் மூர்த்தி இயக்கத்தில் துடரும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால் உடன் இணைந்து ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சஜி குமார் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கார் ஓட்டுநராக நடித்துள்ள மோகன்லாலின் வாழ்வில் நடக்கும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து வருகிறார் என்பதை பின்னணியாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த படத்தில் இருந்து வெளியான கண்மணி பூவே பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே சமயம் இந்த படத்தின் டீசரும், ட்ரைலரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் இப்படம் 2025 மே மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பாக இப்படம் ஏப்ரல் 25 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.
- Advertisement -