Homeசெய்திகள்சினிமா'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் இணையும் பிரபலங்கள் யார் யார்?

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் இணையும் பிரபலங்கள் யார் யார்?

-

- Advertisement -

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் இணையும் பிரபலங்கள் யார் யார்?

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை பிரபல இயக்குனர் சுந்தர். சி இயக்க இருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ரெஜினா, யோகி பாபு, துனியா விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் அருண் விஜய் படத்தில் வில்லனாக நடிக்கிறார் எனவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் இந்த படமானது சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருப்பதாகவும் ஏற்கனவே தகவல் பரவி வருகிறது.
'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் இணையும் பிரபலங்கள் யார் யார்?இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 6) பூஜையுடன் தொடங்குகிறது. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் யார் யாருக்கு என்ன மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்த தகவலும் படப்பிடிப்பு எங்கு நடைபெற இருக்கிறது என்பது குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ