வாரா வாரம் வெள்ளிக்கிழமை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு விருந்து தான். அந்த அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தியேட்டர்கள் மற்றும் ஓடிடி ரிலீஸ்கள் என பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கின்றன. அந்த வகையில் இந்த வார வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.
துருவ நட்சத்திரம்
கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரித்து வர்மா, சிம்ரன், பார்த்திபன், விநாயகன், ராதிகா சரத்குமார் போன்ற பல நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். ஆக்சன் படமாக வெளியாக உள்ள இந்த படத்திற்கு நடிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவான இப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தற்போது துருவ நட்சத்திரம் திரைப்படம் நாளை (நவம்பர் 24) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

80’s பில்டப்
சந்தானம் நடிப்பில் காமெடி மற்றும் சில ஹாரர் விஷயங்கள் கலந்த படமாக உருவாகியுள்ள படம் தான் 80ஸ் பில்டப். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது. சந்தானத்தின் டி டி ரிட்டன்ஸ் படத்தைப் போல இப்படமும் அதிக வசூலை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜாக்பாட் படத்தை இயக்கிய கல்யாண இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறப்பிடத்தக்கது.
ஜோ
சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகர் ரியோ ராஜ். இவர் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தற்போது இவர் நடித்துள்ள ஜோ படத்தை ஹரிஹரன் ராம் இயக்கியுள்ளார். இப்படமும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அவள் பெயர் ரஜ்னி
காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படத்தின் டப்பிங்கான அவள் பெயர் ரஜ்னி என்ற த்ரில்லர் படமும் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
சில நொடிகளில்
ரிஷி ரிச்சர்ட், யாஷிகா ஆனந்த் ந ஆகியோரில் நடிப்பில் வினை பரத்வாஜ் இயக்கியுள்ள படம் தான் சில நொடிகளில். திரில்லர் ட்ராமா வகைப்படமான இப்படமும் நாளை வெள்ளிகிழமை அன்று (நவம்பர் 24) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
குய்கோ
இப்படம் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஏ எஸ் டி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருள் செழியன் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் நவம்பர் 24 நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.