Homeசெய்திகள்சினிமாஅழகிய கவிதை வரிகளால் பி.சுசீலாவை வாழ்த்திய வைரமுத்து!

அழகிய கவிதை வரிகளால் பி.சுசீலாவை வாழ்த்திய வைரமுத்து!

-

- Advertisement -

பி சுசீலா தமிழ் சினிமாவில் கடந்த 70 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கிட்டத்தட்ட 25 ஆயிரத்துக்கு மேலான பாடல்களைப் பாடி இருக்கிறார். நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவனே அழலாமா, நலந்தானா நலந்தானா என பல பாடல்களை பாடி தன் இனிய காந்த குரலால் கட்டிப் போட்டவர் தான் பி. சுசீலா. காண சரஸ்வதி, கான கோகிலா, இசையரசி என்ற பல பெயர்களும் பி சுசீலாவிற்கு உண்டு.
ஆந்திரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ளார், பலதரப்பட்ட இந்திய பமொழிகளில் பாடல்களை பாடியதால் கின்னஸ் புத்தகத்திலும் சாதனையாளராக இடம் பெற்றுள்ளார். காயம் பட்ட பல நெஞ்சங்களுக்கு தன் இனிய குரல் மூலம் பாடல்களை மருந்தாக வழங்கியவர் பி சுசிலா. அந்த வகையில் இவரை டாக்டர் என்றும் அழைப்பர்.
இந்நிலையில் பி சுசீலாவை கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்தி அவர் பாடிய பாடல்களை வைத்தே கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த கவிதை பல ரசிகர்களுக்கும் பி சுசீலா பாடிய பாடல்களுடன் நினைவூஞ்சலில் ஆடுவது போல நினைவுப்படுத்துகின்றன.

“நீ மலர்ந்தும் மலராத பாடியபோது என் பாதிமலர்க் கண்களில் மீதி மலர்க் கண்களும் மென்துயில் கொண்டன சிட்டுக் குருவி முத்தம் கொடுத்தபோது எனக்கு முதல்மீசை முளைத்தது உன் கங்கைக்கரைத் தோட்டத்தில் நான் கால்சட்டை போட்ட கண்ணனானேன் சொன்னது நீதானாவென்று சொற்களுக்கிடையில் விம்மிய பொழுது என் கண்களில் வெளியேறியது ரத்தம் வெள்ளை வெள்ளையாய் காலமகள் கண்திறப்பாள் பாடியபோது என் எலும்பு மஜ்ஜைகளில் குருதியும் நம்பிக்கையும் சேர்ந்து சுரந்தன நீ காதல் சிறகைக் காற்றினில் விரித்தபோது ஒரு தேவதையின் சிறகடியில் என் காதல் சம்பவம் நிகழ்ந்தது நீ கண்ணுக்கு மையழகு பாடவந்தபோது சந்திரனும் சூரியனும் நட்சத்திரமும் கூழாங்கல்லும் என் தமிழும் அழகாயின எத்துணையோ காயங்களை ஆற்றியபிறகு உன்னை டாக்டர் என்கிறார்கள் வாழ்க நீ அம்மா” என்று அழகிய கவிதை வரிகளால் பி சுசிலாவை வாழ்த்தியுள்ளார்.

MUST READ