முஃபாசா தி லயன் கிங் திரைப்படம் நாளை ஓடிடிக்கு வருகிறது.
காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை சிறுவயதிலிருந்தே நாம் கண்டுகளித்து வருகிறோம். அந்த வகையில் 2019ல் தி லயன் கிங் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதாவது சூழ்ச்சி செய்யும் உடன்பிறப்பால் நயவஞ்சகமாக கொல்லப்படும் காட்டின் அரசனான சிங்கம், அடிமையாக்கப்படும் ராணி சிங்கம், நாட்டை விட்டு துரத்தப்படும் இளவரசன் சிங்கம் என அரச குடும்பம் பரிதவித்து நிற்கும் நிலையில் இறுதியில் இளவரசன் எதிரிகளை வீழ்த்தி தன் தந்தையின் அறியாசனத்தை கைப்பற்றி சக காட்டு விலங்குகளையும் காப்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படம் உருவாக்கப்பட்ட விதம் இன்றுவரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்நிலையில் தி லயன் கிங் படத்தின் முந்தைய கதையாக, சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவான திரைப்படம் தான் முஃபாசா தி லயன் கிங். யாரும் இல்லாத அனாதையாக வளர்ந்து வரும் முஃபாசா தனக்கான ஆட்சியை உருவாக்கும் கதைதான் இது. இந்தப் படத்தை ஆஸ்கர் விருதினை வென்ற ஜெஃப் நதன்சன் எழுதியுள்ள நிலையில் பேரி ஜென்கின்ஸ் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஏ படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படம் நாளை மார்ச் 26 ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், இந்தி, தெலுங்கு ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.