பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட 2023 ஆம் ஆண்டின் “நாம் காலண்டர்” வெளியிடப்பட்டது.

சென்னை தி.நகரில் சுகாசினி மணிரத்தினம் அவர்களால் நடத்தப்படும் “நாம் தொண்டு நிறுவனம்” சார்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட நாம் காலண்டர் வெளியிடப்பட்டது.இதன் முதல் பிரதியை மணிரத்னம் வழங்க கல்கியின் பேத்தி கௌரி ராம நாராயணன் பெற்று கொண்டார். பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் உள்ளடங்கிய இந்த காலண்டர் மூலம் கிடைக்க பெறும் பணத்தை “நாம் தொண்டு நிறுவனம்” மேற்கொள்ளும் பணிகளுக்காக செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம்,ரகுமான் ஆகியோருக்கு “நாம் காலண்டர்” வழங்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஜெயம்ரவி, என் பாக்கெட்டில் ரூ.2000 தான் உள்ளது. இந்த காலண்டர் மதிப்பு அதை விட அதிகமாக இருக்கும் என தெரிவித்து பணத்தை கொடுத்து காலண்டர் பெற்று கொண்டார். உங்களால் முடிந்ததை இந்த தொண்டு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்” என்றார்.