Homeசெய்திகள்சினிமாநகுல் நடிக்கும் 'வாஸ்கோடகாமா' ..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நகுல் நடிக்கும் ‘வாஸ்கோடகாமா’ ….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

நகுல் நடிப்பில் உருவாகும் வாஸ்கோடகாமா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நகுல் நடிக்கும் 'வாஸ்கோடகாமா' ..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் நகுல், தமிழ் சினிமாவில் பாய்ஸ் காதலில் விழுந்தேன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை போன்ற படங்களிலும் நடித்திருந்தார். தற்போது இவர் தி டார்க் ஹெவன் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் நகுல், வாஸ்கோடகாமா எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நகுளுடன் இணைந்து அர்தனா, படவா கோபி, ரவி மரியா, பிரேம்குமார், ரெடின் கிங்ஸ்லி, நமோ நாராயணன், மன்சூர் அலிகான், கே எஸ் ரவிக்குமார், அனிதா சம்பத், ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆர்ஜே கிருஷ்ணன் இயக்கியுள்ளார். 5656 புரொடக்சன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு என் பி அருண் இசை அமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதாவது இந்த படமானது குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக வளர்ச்சி அடைந்து எதிர்காலத்தில் (100 ஆண்டுகளுக்கு பின்) என்னவாக ஆகப்போகிறான். அவனுடைய குணமும், மனநிலையும் எப்படி இருக்கும் என்பதை சொல்வது தான் படத்தின் கதை. நகுல் நடிக்கும் 'வாஸ்கோடகாமா' ..... ரிலீஸ் தேதி அறிவிப்பு!கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் நிலுவையில் இருந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படமானது வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ