Homeசெய்திகள்சினிமாநந்தா பெரியசாமி இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் சமுத்திரக்கனி!

நந்தா பெரியசாமி இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் சமுத்திரக்கனி!

-

- Advertisement -

சமுத்திரக்கனி இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

கௌதம் கார்த்திக், சேரன், சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் இயக்குனர் நந்தா பெரியசாமி அடுத்ததாக சமுத்திரக்கனி நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் அனன்யா, பாரதிராஜா, நாசர் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேகமலை, மூணார், குமுளி உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இதற்கிடையில் சமுத்திரக்கனி, பவன் கல்யாண் நடிப்பில் ‘வினோதய சித்தம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார். அந்தப் படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் விமானம் உள்ளிட்ட பல படங்களிலும் சமுத்திரக்கனி நடித்து வருகிறார்.

MUST READ