Homeசெய்திகள்சினிமாமும்பை விருது விழாவில் நயன்தாரா... அசத்தல் புகைப்படங்கள் வைரல்...

மும்பை விருது விழாவில் நயன்தாரா… அசத்தல் புகைப்படங்கள் வைரல்…

-

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் முன்னனி நாயகியாக வலம் வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கி விட்டார். அண்மையில் பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அட்லீ இத்திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தின் மெகா ஹிட்டைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நயன்தாரா பாலிவுட்டில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழிலும் அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அன்னபூரணி. இப்படத்தை அறிமுக இயக்குநர் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

அவ்வப்போது மும்பை செல்லும் அவர், அம்பானி வீட்டு விழா முதல் கொண்டு அனைத்து விருது விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், ஜிக்யூ இந்தியா மேகசின் நடத்தும் விருது விழாவில் மோஸ்ட் இன்புளூயன்ஷியல் யங் இந்தியன்ஸ் 2024 விருதை வென்றிருக்கிறார். இந்த விழாவிற்கு கலக்கலாக சென்ற நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ