spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசித்தார்த் - அதிதி ராவ் ஜோடிக்கு நயன்தாரா வாழ்த்து!

சித்தார்த் – அதிதி ராவ் ஜோடிக்கு நயன்தாரா வாழ்த்து!

-

- Advertisement -

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடைசியாக சித்தா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சித்தார்த் - அதிதி ராவ் ஜோடிக்கு நயன்தாரா வாழ்த்து!அதைத்தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சித்தார்த். இதற்கிடையில் சித்தார்த், காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நடிகை அதிதி ராவ் உடன் நீண்ட நாட்களாக காதலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதைத்தொடர்ந்து திடீரென இருவரும் தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை இருவரும் இணைந்து குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உள்ளார்கள் என்பது போல் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகிய இருவரும் E.N.G.A.G.E.D என்று தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் கையில் மோதிரம் மாட்டியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருந்தனர். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சித்தார்த் - அதிதி ராவ் ஜோடிக்கு நயன்தாரா வாழ்த்து! மேலும் சித்தார்த் அதிதி ராவ் ஜோடிக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாவில், ” சித்தார்த் – அதிதி ராவ் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டு அவர்களை வாழ்த்தி உள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ