spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடிராகன் படத்தால் வாஷ் அவுட் ஆன 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' .... ஓடிடி...

டிராகன் படத்தால் வாஷ் அவுட் ஆன ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ …. ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.டிராகன் படத்தால் வாஷ் அவுட் ஆன 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' .... ஓடிடி ரிலீஸ் அப்டேட்!கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் பவிஷ் கதாநாயகனாக நடிக்க அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார். வழக்கமான காதல் கதையில் வெளியான இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் திரைக்கு வந்த பின்னர் ரசிகர்களை கவரவில்லை. ஆகையினால் வசூலிலும் சரிவை சந்தித்துள்ளது.டிராகன் படத்தால் வாஷ் அவுட் ஆன 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' .... ஓடிடி ரிலீஸ் அப்டேட்!ஏனென்றால் இப்படம் வெளியான அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. எனவே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பும், வசூலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்படம் வருகின்ற மார்ச் 21ஆம் தேதி ஓடிடிக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ