ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளில் NTR 31 படம் சம்பந்தமான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது .
ஜூனியர் என்டிஆர் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2022ல் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், தேவரா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொராட்டலா சிவா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் இந்த படமானது அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜூனியர் என்டிஆர், கே ஜி எஃப், சலார் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்திற்கு டிராகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் தலைப்பும்
டிராகன் என்பதால் NTR 31 படத்தின் தலைப்பு மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஜூனியர் என்டிஆர் தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் NTR 31 பட குழுவினர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.