Homeசெய்திகள்சினிமாசர்தார் படம் வெளியாகி ஓராண்டு நிறைவு... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி...

சர்தார் படம் வெளியாகி ஓராண்டு நிறைவு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி…

-

- Advertisement -
கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது 26 ஆவது படத்தை நலன் குமாரசாமி இயக்கத்திலும் 27வது படத்தை பிரேம்குமார் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி அப்பா, மகன் என்ற இரு வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தை இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் ஜிபி பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருந்தார். தண்ணீர் மற்றும் பிளாஸ்டிக் சம்பந்தமான கதைக்களத்தில் அரசியல் பின்னணியை கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சர்தார் முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்கிறது என்றும் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சர்தார் முதல் பாகம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவு ஆகியுள்ளது. இதனை, நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், சர்தார் இரண்டாம் பாகம் குறித்த தகவல் விரைவில் வௌியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

MUST READ