பி வாசு தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ராதிகா சரத்குமார், வடிவேலு மகிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. எம் எம் கீரவாணி இதற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனது 69 வது பிறந்தநாளை நேற்று சந்திரமுகி 2 பட குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதைத் தொடர்ந்து பி வாசு தனது உதவி இயக்குனர்களுக்கு லேப்டாப்களை பரிசளித்துள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- Advertisement -