spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியை படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடும் பா.ரஞ்சித்!

ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியை படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடும் பா.ரஞ்சித்!

-

- Advertisement -

ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் பா. ரஞ்சித் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியை படக்குழுவுடன் கேட்டுக் கொண்டாடும் பா.ரஞ்சித்!பா. ரஞ்சித் தயாரிப்பில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான படம் ப்ளூ ஸ்டார். எஸ் ஜெயக்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அசோக்செல்வன், சாந்தனு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். படத்தில் ரஞ்சித் என்ற கதாபாத்திரத்தில் அசோக் செல்வனும், ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் சாந்தனுவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், அருண் பாலாஜி, ஜெயப்பெருமாள், ஜெயச்சந்திரன், தாமு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியை படக்குழுவுடன் கேட்டுக் கொண்டாடும் பா.ரஞ்சித்! இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிக்கெட்டில் உள்ள அரசியலை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்றைய இளைஞர்களை கவரும் விதத்தில், நம் சொந்த ஊரில் நடப்பது போன்ற கதையை கொடுத்துள்ளார் எஸ் ஜெயகுமார்.ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியை படக்குழுவுடன் கேட்டுக் கொண்டாடும் பா.ரஞ்சித்!

we-r-hiring

இந்நிலையில் படத்தின் வெற்றியை  இயக்குனரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் பட குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

MUST READ