பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இவர் தற்போது வேட்டுவம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சோபிதா துலிபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களை தவிர கலையரசன், லிங்கேஷ் ஆகியோரும் படத்தில் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை பா. ரஞ்சித் தன்னுடைய நீலம் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இந்தப் படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்துள்ளது. அதாவது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றதாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டிருக்கிறதாம். மேலும் இந்த படப்பிடிப்பில் படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் பங்கேற்பார்கள் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.