Homeசெய்திகள்சினிமாஇன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்..... மேக்கிங் வீடியோவை வெளியிட்ட 'பராசக்தி' படக்குழு!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்….. மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு!

-

- Advertisement -

பராசக்தி படத்திலிருந்து மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு SK 23 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்..... மேக்கிங் வீடியோவை வெளியிட்ட 'பராசக்தி' படக்குழு! அதே சமயம் இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படமான பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படமானது 1965 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. அதன்படி இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு சிதம்பரம், மதுரை, காரைக்குடி போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 17) நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 40 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

we-r-hiring

எனவே அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பராசக்தி படக் குழு அப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ