நடிகர் பார்த்திபன், விஜய் கட்சியில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தனது 69ஆவது படமான ‘ஜனநாயகன்’ படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறியுள்ளார். அதன்படி மாநாடு, கட்சி கூட்டம், பிரச்சாரம் என பிசியாக இருந்து வருகிறார். அதே சமயம் நடிகர் பார்த்திபன், தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் குணசத்திர வேடங்களில் நடிக்கிறார். தற்போது தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்த்திபன். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நண்பர்களே இன்று மாலை 4.46 மணிக்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Friends..
இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது.
உஷார்!!! pic.twitter.com/jK1p5YdAeA— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 13, 2025

இதன்மூலம் பார்த்திபன், விஜயின் தவெக கட்சியில் இணையப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஏற்கனவே நடிகர் பார்த்திபன், விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நாள் முதலே அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார். அது மட்டும் இல்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்னர், தான் அரசியலுக்கு வருவதாகவும் கூறியிருந்தார். எனவே பார்த்திபன் விஜயுடன் இணைய போகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.