நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்பை பெப்சி உமா மறுத்திருக்கிறார். இதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
90-களில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி பிரபலமானவர் பெப்சி உமா. 15 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பிரபலமாக வலம் வந்தவர், ஒரு கட்டத்தில் தொலைக்காட்சியை விட்டு விலகினார். இந்நிலையில், சமீபத்தில் அவர் தொலைக்காட்சியை விட்டு விலக என்ன காரணம் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் விருது வழங்கும் விழா ஒன்றில் பெப்சி உமா கலந்து கொண்டார். இதில், பேசிய அவர், நான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய காலத்தில் எனக்கு மூட்டை மூட்டையாக காதல் கடிதங்கள் வரும். அதைப் பார்க்கும்போது பிரம்மிப்பாக இருக்கும். மதுரையில் இருந்து வந்த ரசிகர் ஒருவர், தன் சுண்டு விரலை வெட்டி அனுப்பினார். அதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். அதேபோல, ரஜினிகாந்த், ஷாருக்கான், பாரதிராஜா, கே பாலச்சந்தர் ஆகிய ஜாம்பவான்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், நான் நடிக்க தயாராக இல்லை என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.
நடிப்பின்மீது ஆர்வம் இல்லாமல் போனதே இதற்கு காரணம். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது, எனக்கு ஒரு கட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், உடல் ஓய்வுக்காக பணியிலிருந்து விலகினேன் என பெப்சி உமா தெரிவித்துள்ளார்.