spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபோக்கிரி ரி ரிலீஸ்... வெளியானது புதிய டீசர்...

போக்கிரி ரி ரிலீஸ்… வெளியானது புதிய டீசர்…

-

- Advertisement -
போக்கிரி திரைப்படம் ரி ரிலீஸாவதை முன்னிட்டு படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக, பல வெற்றிப் படங்களை கொடுத்து பல லட்சம் ரசிகர்களை பெற்றவர் தளபதி விஜய். இரண்டு படம் தோல்வி அடைந்தாளே சினிமாவிலிருந்து காணாமல் போகும் நடிகர்களுக்கு மத்தியில், 31 வருடங்களாக கோலிவுட் எனும் கோட்டையில் தன் கொடியை இறங்காமல் காத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். சிறியதில் தொடங்கி பெரியதில் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் மாபெரும் நட்சத்திரம்.

தமிழ் சினிமாவில் 31 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் விஜய், வரும் ஜூன் 22-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரது நடிப்பில் மாபெரும் ஹிட் அடித்த திரைப்படங்கள் தற்போது ரி ரிலீஸ் செய்யப்படவுள்ளன. அந்த வகையில், விஜய் நடித்த போக்கிரி திரைப்படமும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது. இத்திரைப்படத்தை பிரபல நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா இயக்கி இருந்தார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் மற்றும் வடிவேலு, பிரகாஷ் ராஜ், நாசர், நெப்போலியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படமும் ஜூன் 21-ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், படத்தின் புதிய முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. போக்கிரி மட்டுமன்றி துப்பாக்கி, சச்சின் ஆகிய படங்களும் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

MUST READ