Homeசெய்திகள்சினிமாபொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம் ஏப்ரல் 28 ல் வெளியீடு

பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம் ஏப்ரல் 28 ல் வெளியீடு

-

- Advertisement -

பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி  மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அப்படத்தின் இறுதியில் 2 ஆம் பாகம் வரும் சொல்லி இருந்த நிலையில் அது குறித்து அறிவிப்பு இன்று வெளியானது.

we-r-hiring

அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அண்மையில் ஒரு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பொன்னியின் செல்வன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார். ஆனால் அது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. அவர் கூறியது போலவே தற்போது அறிவிப்பு வெளியானது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

MUST READ