Homeசெய்திகள்சினிமாபடத்துல அந்த சீன்ஸ் நிறைய இருக்கு.... 'ரெட்ரோ' குறித்து பூஜா ஹெக்டே!

படத்துல அந்த சீன்ஸ் நிறைய இருக்கு…. ‘ரெட்ரோ’ குறித்து பூஜா ஹெக்டே!

-

- Advertisement -

நடிகை பூஜா ஹெக்டே, ரெட்ரோ படம் குறித்து பேசி உள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே.  படத்துல அந்த சீன்ஸ் நிறைய இருக்கு.... 'ரெட்ரோ' குறித்து பூஜா ஹெக்டே!இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து விஜயின் பீஸ்ட் படத்திலும் நடித்திருந்தார். அடுத்தது ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். இதற்கிடையில் இவர் சூர்யாவின் 44 வது படமாக உருவாகி இருக்கும் ரெட்ரோ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் இருந்து அடுத்த அடுத்த பாடல்களும் வெளியாகி வருகின்றன. விரைவில் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது.  படத்துல அந்த சீன்ஸ் நிறைய இருக்கு.... 'ரெட்ரோ' குறித்து பூஜா ஹெக்டே!இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ரெட்ரோ பட குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், ” கார்த்திக் சுப்பராஜ் சார் நிறைய கேங்ஸ்டர் படங்கள் பண்ணியிருக்கிறேன் என்று சொன்னார். அதனால் இப்போது அவருடைய ஸ்டைலில் ஒரு லவ் ஸ்டோரி பண்ண வேண்டும் என ஆசைப்பட்டார். அவர் தனித்துவமான படங்களை உருவாக்குபவர். ரெட்ரோ படத்தில் நிறைய சிங்கிள் ஷாட் சீன்ஸ் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ