விஷ்ணு விஷால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ஆர்யன், மோகன்தாஸ் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இயக்குனர் கோகுல், அருண் ராஜா காமராஜ் போன்ற இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார் விஷ்ணு விஷால். இதற்கிடையில் விஷ்ணு விஷாலின் முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த ராம்குமார் இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். அதன்படி ராம்குமார், விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகி வரும் இந்த புதிய படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஷ்ணு விஷாலின் 21 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு தற்போது கொடைக்கானல் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் லவ் ஃபேண்டஸி படமாக உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான மலையாள படமான பிரேமலு படத்தில் நடித்திருந்த மமிதா பைஜூ VV21 படத்தில் இணைந்துள்ளார் என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது. மமிதா பைஜூ, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிபெல் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -