Homeசெய்திகள்சினிமாபிரித்விராஜ் நடிக்கும் 'ஆடு ஜீவிதம்'.... இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு!

பிரித்விராஜ் நடிக்கும் ‘ஆடு ஜீவிதம்’…. இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு!

-

பிரித்விராஜ் நடிக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிரித்விராஜ் நடிக்கும் 'ஆடு ஜீவிதம்'.... இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு!

இயக்குனரும் நடிகருமான பிரித்விராஜ் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடைசியாக பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரித்விராஜ். அதேசமயம் மோகன்லால் நடிப்பில் லூசிபர் 2 எம்புரான் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதற்கிடையில் இவர் பிளஸ்ஸி இயக்கத்தில் ஆடு ஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.பிரித்விராஜ் நடிக்கும் 'ஆடு ஜீவிதம்'.... இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு! இந்த படம் பென்யமின் எழுதிய கோட் டேஸ் என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. சர்வைவல் படமாக தயாராகியுள்ள இந்த படமானது ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அறிவித்த தேதிக்கு முன்னதாகவே வெளியாக இருப்பதாகவும் படக்குழுவினர் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்து இருந்தனர். அதன்படி இத்திரைப்படம் மார்ச் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஆடு ஜீவிதம் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா மார்ச் 10ஆம் தேதி நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் விஷுவல் ரொமான்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே டிரைலர் வெளியாகி படத்தில் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

MUST READ