பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரித்விராஜ் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். அதே சமயம் இவர் இயக்குனராகவும் உருவெடுத்து பல படங்களை இயக்கியும் வருகிறார். கடைசியாக பிரித்விராஜ் நடிப்பில் குருவாயூர் அம்பல நடையில் திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இதற்கிடையில் பிரித்விராஜ் ஆடு ஜிவிதம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் பிளஸ்ஸி இயக்கியிருந்த இந்த படத்தில் பிரித்விராஜ் உடன் இணைந்து அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க சுனில் இதற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். பென்யமின் எழுதிய தி கோட் டேஸ் எனும் நாவலைத் தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கடந்த மார்ச் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்களிடையே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வந்த இந்த படம் தற்போது வரை கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற மே 26 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.