ப்ரியா பவானி சங்கர் மீண்டும் தெலுங்கில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ப்ரியா பவானி சங்கர், தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் டிமான்டி காலனி 2, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து விஷால், ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் ப்ரியா பவானி சங்கர் தெலுங்கில் பீமா எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தில் கோபிசந்துக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இதில் மற்றொரு நாயகியாக மாளவிகா ஷர்மா நடிக்கிறார்.கன்னட இயக்குனர் ஹர்ஷா இந்த படத்தை இயக்க சத்திய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு கே ஜி எஃப் படத்தின் இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.
ஏற்கனவே தெலுங்கில் கடந்த ஜனவரி மாதத்தில் வெளியான கல்யாணம் கமநீயம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.