Homeசெய்திகள்சினிமா33 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினி, மணிரத்னம் கூட்டணி!

33 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினி, மணிரத்னம் கூட்டணி!

-

- Advertisement -

33 வருடங்களுக்கு பிறகு ரஜினி மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.33 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினி, மணிரத்னம் கூட்டணி!

கடந்த 1991 ஆம் ஆண்டு தளபதி எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தினை ரஜினி நடிப்பில் மணிரத்னம் இயக்கியிருந்தார். படத்தில் ரஜினியுடன் இணைந்து மம்மூட்டி, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் பிரபலமானது. ரசிகர்கள் பலருக்கும் ரஜினி நடித்து வெளியான படங்களில் இந்த படமும் ஃபேவரிட்டான ஒன்று. அந்த அளவிற்கு இந்த படம் இன்றுவரையிலும் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக விளங்குகிறது.
இந்நிலையில் 33 வருடங்களுக்குப் பிறகு ரஜினி, மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ரஜினி, தற்போது உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு கூலி, ஜெயிலர் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். 33 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினி, மணிரத்னம் கூட்டணி!அதேசமயம் மணிரத்னம் தற்போது கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து ரஜினியை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ