சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படமானது 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அனிருத்தின் இசை ஜெயிலர் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருந்தது. அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஜெயிலர் திரைப்படம் வெளியானதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாகவே நிலவி வந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக நெல்சன் தரமான கதையை ரஜினிக்காக தயார் செய்து வைத்திருந்தார். அதனால் நெல்சனுக்கும் இப்படம் சிறந்த கம்பேக் படமாக அமைந்தது. கலாநிதி மாறன், ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகிய மூவருக்கும் பரிசுகள் வழங்கினார்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் நெல்சனுக்கும் ரஜினிக்கும் ஜெயிலர் 2 படத்திற்கான அட்வான்ஸ் பணத்தை கொடுத்து விட்டதாகவும் உறுதியாக ஜெயிலர் 2 படம் உருவாகும் எனவும் கூறப்படுகிறது. அதாவது ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். அடுத்ததாக தலைவர் 172 படமானது உறுதியாக ஜெயிலர் 2வாக தான் இருக்கும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.