- Advertisement -
வேட்டையன் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த், ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

இந்திய திரைத்துறையின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்திற்கு பிறகு அடுத்து நடிப்பதில்லை என்று தகவல் வெளியான நிலையில், தற்போது ரஜினி அடுத்தடுத்து பல இயக்குநர்களின் கதையில் ஒப்பந்தமமாகி வருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் இயக்கிய இத்திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் ஜெயிலர் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து தற்போது ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, நெல்லை, மும்பை, புதுவை என மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு, படக்குழு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
Thalaivar started for the final schedule of shooting for #Vettaiyan expecting a 1000 crores blockbuster 🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥👌👌👌👌👌#LalSalaam #Vettaiyan #Thalaivar171 pic.twitter.com/D4lZMwhodu
— Elon (@Elon90Elon) February 27, 2024