spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினிகாந்த் மிக எளிமையான மனிதர் – டி.ராஜேந்தர் புகழாரம்!

ரஜினிகாந்த் மிக எளிமையான மனிதர் – டி.ராஜேந்தர் புகழாரம்!

-

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்திற்கு பொன்விழா வாழ்த்துக்கள்; அவரின் பொன்விழா பற்றி பேச வாய்ப்பு கிடைத்தால் மணி கணக்கில் பேசுவேன் என இயக்குநர் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்!ரஜினிகாந்த் மிக எளிமையான மனிதர் – டி.ராஜேந்தர் புகழாரம்!நடிகர் ரஜினிகாந்த் திரையுலகத்திற்கு  வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து தமிழ் திரை உலகின் பன்முக கலைஞனான டி.ராஜேந்தர்,  ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் ரஜினிகாந்த் மிக எளிமையான மனிதர். ஒருவரை அனைவருக்கும் பிடித்து விடாது.  ஆனால் பிடித்து விட்டால் அவ்வளவு எளிதில் விட்டு விட மாட்டார்கள். அப்படி ரஜினிகாந்தை அனைவருக்கும் பிடித்துள்ளது. அவர் மிக எளிமையாக பழகக் கூடியவர். அவருக்கும் தனக்கும் நல்ல நட்பு இருக்கிறது.  ரஜினிகாந்த் நடித்த அதிசய பிறவி உள்ளிட்ட படங்களை வெளியீட்டுக்கு முன்பு போட்டு காண்பித்து படம் எப்படி இருக்கிறது என்று தன்னிடம் கருத்து கேட்டுள்ளார் என்றும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

we-r-hiring

அதுமட்டுமல்லாமல், ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்களை வட ஆர்காடு, தென் ஆர்காடு பகுதிகளில், தன்னுடைய நிறுவனம் மூலம் விநியோகம் செய்து லாபம் ஈட்டியதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்தின் பொன்விழா ஆண்டில் மேடை ஏறி அவரைப்பற்றிப்பேச வாய்ப்பு கிடைத்தால், மணி கணக்கில் மைக்கு பிடித்து பேசுவேன் என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை வங்கி மோசடி வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது

MUST READ