spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர் 2' படத்திற்குப் பிறகு தன்னுடைய சுயசரிதையை எழுதப் போகும் ரஜினிகாந்த்!

‘ஜெயிலர் 2’ படத்திற்குப் பிறகு தன்னுடைய சுயசரிதையை எழுதப் போகும் ரஜினிகாந்த்!

-

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்திற்குப் பிறகு தன்னுடைய சுயசரிதையை எழுதப் போகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றியவர் என்பது அனைவரும் அறிந்ததே.

we-r-hiring

'ஜெயிலர் 2' படத்திற்குப் பிறகு தன்னுடைய சுயசரிதையை எழுதப் போகும் ரஜினிகாந்த்!

ஆனால் அப்போது பஸ் கண்டக்டராக இருந்து விசில் அடித்த அவருக்கு இன்று கோடான கோடி ரசிகர்கள் அவருக்காக விசில் அடிப்பார்கள் என்று யாருமே எதிர்பார்க்காதது. அந்த அளவிற்கு தனது உழைப்பினாலும் திறமையினாலும் அன்று முதல் இன்று வரை ஒரே ஒரு சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 170 படங்களில் நடித்துள்ள ரஜினி ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவர் கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார் ரஜினி. எனவே கூலி மற்றும் ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு தன்னுடைய சுயசரிதையை எழுதப் போகிறாராம் ரஜினி. அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சுயசரிதை எழுதுவது குறித்து பேசி இருந்தார்.'ஜெயிலர் 2' படத்திற்குப் பிறகு தன்னுடைய சுயசரிதையை எழுதப் போகும் ரஜினிகாந்த்! அதாவது சுயசரிதை எழுத விரும்புவதாகவும் ஆனால் அதை எழுத ஒரு சில தடைகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். சுயசரிதை எழுத வேண்டும் என்றால் உண்மைகளை சொல்ல வேண்டும். அப்படி உண்மைகளை சொல்லவில்லை என்றால் அது சுயசரிதையாக இருக்காது. உண்மைகளை சொன்னால் பலருக்கும் சங்கடம் ஏற்படும் என்று பல கோணத்தில் யோசித்தார் ரஜினி. ஆனால் தற்போது அவர் சுயசரிதை எழுதுவது குறித்த தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ