Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொன்ன ரஜினி பட இயக்குனர்!

சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொன்ன ரஜினி பட இயக்குனர்!

-

- Advertisement -

ரஜினி பட இயக்குனர் சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது.சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொன்ன ரஜினி பட இயக்குனர்!

நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சின்ன திரையில் பணியாற்றி தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தவர். அதைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்த இவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், ரஜினி முருகன், காக்கி சட்டை ஆகிய வெற்றி படங்களை நடித்து பெயர் பெற்றுள்ளார். இவ்வாறு தனது கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். அதன்படி இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து இவர் கமிட்டாகும் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது. அந்த வகையில் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி, விநாயக் சந்திரசேகரன், வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனை சந்தித்து கதை சொன்ன ரஜினி பட இயக்குனர்!இவ்வாறு பிஸியான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனை, சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் நேரில் சந்தித்து கதை சொன்னதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே தற்போது நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே கார்த்திக் சுப்பராஜ் தற்போது இயக்கி இருக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் வெற்றியைப் பொருத்து, சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யலாம் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திக் சுப்பராஜ் ஏற்கனவே சித்தார்த்தின் ஜிகர்தண்டா, ரஜினியின் பேட்ட, ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே. சூர்யாவின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ