Homeசெய்திகள்சினிமா'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ரஜினிகாந்த்!

‘வேட்டையன்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ரஜினிகாந்த்!

-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேலுடன் கூட்டணி அமைத்தார். 'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ரஜினிகாந்த்!அதன்படி இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க படமானது ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இதில் ரஜினியுடன் இணைந்து மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ரஜினிகாந்த்!இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் டப்பிங் பணிகளும் பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினி தனது டப்பிங் பணிகளை தொடங்கி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ