spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருமண வாழ்வில் 43 ஆண்டுகள் நிறைவு... ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் வாழ்த்து...

திருமண வாழ்வில் 43 ஆண்டுகள் நிறைவு… ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் வாழ்த்து…

-

- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா இருவரும் தங்களின் 43-வது திருமண நாளை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர். சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர். தன்னுடைய தனித்துவமான ஸ்டைலால் 73-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ரஜினிகாந்த், தொடர்ந்து ஹீரோ இமேஜை தக்கவைத்து ரசிகர்களையும் தக்கவைத்துள்ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய ரஜினியின் திரைப்பயணம் ஹீரோவாக மட்டுமில்லாமல் குணச்சித்திரம், வில்லன் என தொடர்ந்து வருகிறது.

அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லால் சலாம் திரைப்படமும் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் கமிட்டாகியுள்ளார் ரஜினிகாந்த்.
we-r-hiring

 

கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் – லதா தம்பதி 43-ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி உள்ளனர். அவர்களுக்கு பலரும் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போல ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், பெற்றோரின் திருமண நாளுக்கு நெகிழ்ச்சியுடன் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

MUST READ