spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதெலுங்கு சூப்பர் ஸ்டார் வீட்டில் புதிதாக ராஜகுமாரி… பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் ராம் சரண்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் வீட்டில் புதிதாக ராஜகுமாரி… பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் ராம் சரண்!

-

- Advertisement -

தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராம் சரண் உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

உபாசனா காமினேனிக்கும் ராம் சரண் கொனிடேலாவுக்கும் 2023 ஜூன் 20 அன்று ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் அப்பல்லோ மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர்” என்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. .

ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா ஆகியோர் டிசம்பர் 2022 இல் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். “ஸ்ரீ ஹனுமான் ஜியின் ஆசியுடன், உபாசனா & ராம் சரண் தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று சிரஞ்சீவி தெரிவித்திருந்தார்.

தம்பதியினர் ஹைதராபாத் மற்றும் துபாயில் பலமுறை வளைகாப்பு கொண்டாடினர்.

“நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாகவும், பதட்டமாகவும், சற்று கவலையாகவும் இருக்கிறோம். நான் மிகையாகவோ அல்லது மனக் கவலையில் இருக்கும் போது, ராம் தான் எனக்கு செல்லமானவர்.
அவர் என்னை அமைதியாக உட்கார வைத்து நாம் நல்ல பெற்றோர்களாக இருப்போம் என்று கூறுவார். குழந்தை வளர்ப்பில் ராம் தீவிரமாக பங்கேற்பார் என்று நான் நம்புகிறேன்.” என்று ராம் சரணின் மனைவி உபாசனா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து புதிய பெற்றோருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

MUST READ