வைபவ் நடிக்கும் ரணம் படம் குறித்தும், கதாபாத்திரம் குறித்தும் படக்குழு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளது.
கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் வைபவ். இவர் முன்னணி இயக்குநரான வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். மேயாதா மான், கப்பல், பபூன், ஆர்.கே.நகர், அரண்மனை, ஆர்.கே.நகர், உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். இது தவிர பல படங்களில் வில்லன் வேடத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
தற்போது வைபவ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ரணம். ஷெரிஃப் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். மிதுன் மித்ரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை மது நாகராஜன் தயாரித்துள்ளார். படத்தில் வைபவுடன் இணைந்து தான்யா ஹோப் மற்றும் நந்திதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு கொரெல்லி இசை அமைத்துள்ளார். கிரைம் திரில்லர் கதைகளத்தில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்நிலையில், படம் குறித்த பேசிய படக்குழு, சடலத்தை வரையும் கதாபாத்திரம் எனவும், சடலத்துடன் நகரும் கதாபாத்திரம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை நகைச்சுவை வேடத்தில் மட்டுமே நடித்துள்ள வைபவ், இப்படத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்தில் நடித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.