ரன்பீர் கபூர் – சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம் படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரன்பீர் கபூர். இவர் கடைசியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கிட்டத்தட்ட 800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக ரன்பீர் கபூர் ராமாயணக் கதையை மையமாக வைத்து உருவாகும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ரீராமனாக ரன்பீர் கபூர் நடிக்க சீதாதேவியாக சாய்பல்லவி நடிக்கிறார். நடிகர் யார் இந்த படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிதீஷ் திவாரி இயக்கி வரும் இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வருகிறது.
அதே சமயம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படம் சுமார் 800 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படம் 2027 ஆம் ஆண்டு வெளியாகும் என்று தகவல் கசிந்து வருகின்றது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -